ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"அமெரிக்காவுக்கும் கொமெனிக்கும் இடையில் ரகசிய உறவு நிலவியது"

  • 3 ஜூன் 2016

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சமீபத்திய உடன்படிக்கைக்கு அமெரிக்கா உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்று இரானின் அதி உயர் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

இரானின் ஆட்சியதிகாரத்தை 1979ஆம் ஆண்டு கைப்பற்றிய இவருக்கு முந்தைய மதத்தலைவரான அயதுல்லா மகொமெனி இறந்து இன்றோடு இருபத்தி ஏழு ஆண்டுகள் முடிகின்றன.

வரலாற்றில், கடும் அமெரிக்க எதிர்ப்பாளராக அறியப்பட்டவர் அவர். ஆனால் அவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு என்பது முன்பு நினைத்திருந்ததை விடவும் சிக்கலானது என்பதையும் அயதுல்லா கொமெனிக்கும் அமெரிக்க அதிபர்களுக்கும் இடையில் இரகசிய உறவு நிலவியதையும் அமெரிக்க ரகசிய ஆவணங்கள் துணையுடன் பிபிசி கண்டறிந்துள்ளது.