அர்ஜென்டினாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம்

  • 4 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

ஆயிரக்கணக்கானவர்கள் அர்ஜென்டினாவில் பூன்ஸ் ஏரிஸ் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

மூன்று 12 வயது பெண் குழந்தைகளை கொன்ற சம்பவம் மற்றும் அண்டை நாடான பிரேசிலில் பதின்ம வயது பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது போன்ற சம்பவங்களை அடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty

ஆண்களும், பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இது சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அர்ஜென்டினாவிற்கு வந்திருந்த அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா, அர்ஜென்டின பெண்கள் வன்முறைக்கு எதிராக போராடும் முயற்சியை பாராட்டினார்.