சிரியா அரசப்படைகள் முன்னேற்றம்

  • 4 ஜூன் 2016

போர் நடவடிக்கைகளில் முன்னேறி வரும் சிரியா அரசப் படைப்பிரிவுகள் ரக்கா மாகாணத்திற்குள் முன்னேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பினரின் தலைநகரான ரக்கா நகர் இங்கு தான் உள்ளது.

யூப்பிரட்டஸில் இருக்கும் பெரியதொரு அணையை சென்றடையும் நோக்கில் ரஷியாவின் விமானப் படை தாக்குதல் ஆதரவோடு சிரியாவின் படைகள் தென் மேற்கிலிருந்து முன்னேறி சென்றுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவிக்கிறது.

அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து மற்றும் அரேபிய கிளர்ச்சிக் குழுவினரும் ரக்கா நகரின் வடக்கில் தாக்குதல் நடத்தியிருக்கின்ற நிலையில் அண்மைய நாட்களில் ஐஎஸ் அமைப்பினர் அதிக அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றனர்