ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா? ஜான் மேஜர் ஆவேசம்

  • 5 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் செய்யும் தலைவர்கள் நேர்மையற்றவர்கள், இழிவானவர்கள் என ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ஜான் மேஜர்.

ஜான் மேஜர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஜூன் மாதம் பிரிட்டன் மக்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்தால் அது ஒரு ஏமாற்றுவேலையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

பிரிட்டன் ஒவ்வொரு வாரமும் 350 மில்லியன் பவுண்டுகளை ஐரோப்பாவிற்கு வழங்குகிறது. ஆனால் அந்தத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியே தரப் படுகிறது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும் தொகை எவ்வளவு என்று தெரியும் அவர் கூறினார்.

அவருக்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வோர், அதனால் ஏற்படும் அதிகப்படியான குடியேற்றத்தை பிரிட்டன் எப்படி சமாளிக்கும் என்பது பற்றி வாய் திறப்பதில்லை என்று விமர்சித்துள்ளார்.