கியூபா: அமெரிக்க நாடுகள் அமைப்பில் ஒருபோதும் சேராது

  • 5 ஜூன் 2016

வாஷிங்டனை மையமாகக் கொண்ட பிராந்திய அமைப்பான அமெரிக்க நாடுகள் அமைப்பில் (ஐஒஎஸ்) கியூபா மறுபடியும் ஒருபோதும் சேரப் போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கியூபா அமெரிக்க நாடுகள் அமைப்பில் ஒருபோதும் சேராது என ராவுல் காஸ்ட்ரோ அறிவிப்பு

அமெரிக்க நாடுகள் அமைப்பின் தலைவர் லுயிஸ் அல்மாக்ரோ கியூபாவின் உறுதியான நட்பு நாடான வெனிசுவேலாவுக்கு எதிராக இந்த அமைப்பின் பட்டயச் சட்டத்தை பயன்படுத்தியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஹவானாவில் நடைபெற்ற கரீபிய நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption லுயிஸ் அல்மாக்ரோவின் முடிவு வெனிசுவேலாவை இந்த அமைப்பிலிருந்து இடைநீக்க செய்யலாம்

அல்மாக்ரோவின் இந்த முடிவால், தற்போதைய எதிர்கட்சியோடு வெனிசுவேலா அரசு கொண்டிருக்கும் சர்ச்சையை வைத்து ஜனநாயக கோட்பாடுகளை மீறியதாக காரணம் காட்டி பிராந்திய அமைப்பிலிருந்தே அதனை இடைநீக்கம் செய்கின்ற நிலை ஏற்படலாம்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்க நாடுகள் அமைப்பிலிருந்து கியூபா வெளியேற்றப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வெனிசுலேவாவை தனிமைபடுத்த அமெரிக்கா பிராந்திய நாடுகளுக்கு கடும் அழுத்தங்களை வழ்ங்குவதாக அதிபர் நிக்கோலாஸ் மதுரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே உச்சி மாநாட்டின் துணை நிகழ்வு ஒன்றில் பேசிய வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னுடைய நாட்டை தனிமைப்படுத்த பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்கா கடும் அழுத்தங்களை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.