பெரு: புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இரண்டாவது சுற்று தேர்தல்

  • 5 ஜூன் 2016

புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு நடைபெறும் இரண்டாவது சுற்று தேர்தலில் பெரு மக்கள் இன்று வாக்களிக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty

இன்றைய வாக்கெடுப்புக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளில், இந்த தேர்தலில் போட்டியிடும் கெய்கோ ஃபுஜிமோரி மற்றும் பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) ஆகிய இரு வேட்பாளர்களும் சமநிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏப்ரலில் நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து ஃபுஜிமோரி அம்மையார் மத்திய வலதுசாரி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஆனால், அதற்குப் பிறகு, உலக வங்கியின் முன்னாள் செயல் அதிகாரியான குசின்ஸ்கி வாக்கு இடைவெளியை குறைத்து மிகவும் நெருங்கி வந்துள்ளார்.

மனித குலத்திற்கு எதிராக நடத்திய குற்றங்களுக்காக சிறை சென்ற முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ ஃபுஜிமோரியின் மகள் தான் வேட்பாளர் ஃபுஜிமோரி.

குற்றங்களை ஒழிக்க முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய சர்வதேச பொருளாதார அனுபவத்தைக் கொண்டு பெருவின் மந்தமான பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கப்போவதாக குசின்ஸ்கி கூறுகிறார்.