ஜோர்தானில் உளவு சேவை அலுவலகம் மீது தாக்குதல்

  • 6 ஜூன் 2016

ஜோர்தானில் உள்ள மிகப் பெரிய பாலஸ்தீன முகாமில் அமைந்துள்ள உளவுச் சேவை அலுவலகம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption உளவு சேவை அலுவலக அதிகாரிகள் மூன்று பேர் இறந்துள்ளனர்

அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் அம்மானுக்கு அருகிலுள்ள பக்கா முகாமில் நடைபெற்ற இச்சம்பத்தில் கொல்லப்பட்டோரில் மூன்று பேர் உளவுதுறை அதிகாரிகள் என்று அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை GETTY
Image caption தலைநகர் அம்மானுக்கு அருகிலுள்ள பக்கா முகாமில் பயங்கரவாத தாக்குதல் என ஜோர்தான் அரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

ஜோர்தானின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடத்தப்படும் இது மாதிரியான தாக்குதல்கள் மிக அரிதானதே.

இந்த சம்பவத்தை நடத்தியதற்கு இதுவரை எந்த குழுவும் பெறுப்பேற்கவில்லை.