ஜோர்தான் உளவு நிறுவன அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல்

  • 6 ஜூன் 2016

நாட்டின் உளவு நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகம் தாக்கப்பட்டு ஐந்து பேர் கொல்லப்பட்டதை பயங்கரவாத தாக்குதல் என்று ஜோர்தான் அரசு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை

தலைநகர் அம்மானுக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமில் இந்த கொலைகளை நடத்தியோர் யார் என பாதுகாப்பு படைப்பரிவுகள் புலனாய்வு மேற்கொண்டு வருவதாக பேச்சாளர் முகமது மேமாமி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை GETTY

அருகிலுள்ள சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பினர் மீது நடத்தப்படும் அமெரிக்க தலைமையிலான படை நடவடிக்கைகளில் ஜோர்தான் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

பல இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்களும், சிரியர்களும் தங்கியிருக்கும் பாக்கா முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு தனியொரு துப்பாக்கிதாரியே காரணம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.