முகமது அலியின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது

  • 6 ஜூன் 2016

மறைந்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் உடல் அவரது சொந்த ஊரான லூயிஸ்வீலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கெண்டக்கி மாநிலத்தில் உள்ள இந்த ஊரில் வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

படத்தின் காப்புரிமை Reuters

முகமது அலியின் உடல் தாங்கிய சவப்பெட்டி ஒரு வாகனத் தொடரணியில் லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

வெள்ளிக்கிழமை இறந்த முகமது அலிக்கு உலகெங்கும் பல தலைவர்கள் அஞ்சலியும் புகழாரங்களையும் செலுத்தியுள்ளனர்.

அவரது இறுதிச்சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.