அமெரிக்க அதிபர் தேர்தல் "வேட்பாளரானார்" ஹிலாரி

அமெரிக்க அதிபர் தேர்தல் "வேட்பாளரானார்" ஹிலாரி

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக வருவதற்கு தேவையான அந்த கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகளின் ஆதரவை பெறுவதில் ஹிலாரி கிளிண்டன் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளார்.

தாம் விரும்பியவர்களை ஆதரிக்கும் அதிகாரம் பெற்ற சூப்பர் டெலிகேட்ஸ் எனப்படும் சிறப்பு பிரதிநிதிகளின் ஆதரவு அவருக்கு அதிகரித்துள்ளதாக அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் அவர் ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக தேர்வாவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் பிரதான அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் ஹிலாரி என்பதாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஹிலரியின் பிரதான எதிரியான பெர்னி சாண்டர்ஸ் தமது போட்டி தொடரும் என்று அறிவித்துள்ளார்.