நியாயமின்றி பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தொடுத்த வழக்கில் பிரெஞ்சு வர்த்தகர் வெற்றி

அதிகார பூர்வமற்ற வங்கிப் பரிமாற்றங்கள் மூலம் தனது வங்கிக்கு ஐந்தரை பிலியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றங்காணப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு வர்த்தகர் தன்னை நியாயமற்ற வகையில் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பணபரிமாற்றம் பற்றி தங்களுக்கு தெரியாது என்று வங்கி பாசாங்கு செய்ய கூடாது என தீர்ப்பு

ஜேரோம் கெர்வியில் என்பவர் வேலைபார்த்த நிறுவனமான ஜெனரல் செசைட்டி அரை மில்லியன் அமெரிக்க டாலர்களை அவருக்கு இழப்பிடாக வழங்க வேண்டுமெனவும் பாரிஸிலுள்ள வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு கெர்வியிலின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அவருடைய பரிமாற்றங்கள் பற்றி தெரியவில்லை என்று வங்கி பாசாங்கு செய்ய கூடாது என்று நீதிபதி இந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளர்.

மோசமான இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக ஜெனரல் செசைட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.