ஹில்லாரி கிளிண்டன் பற்றிய தெரியாத 5 தகவல்கள்

ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேவையான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடைந்த பின் ஜனநாயக கட்சி நியமனத்தை வென்றார் என அசோசியேடட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகிறார் அவர். செனட்டர் முதல் வெளியுறவுச் செயலாளர் என அமெரிக்க அரசியலில் கிளண்டன் பல பதவிகளை வகித்துள்ளார்.

ஆனால் அவர் கிராமி விருதை பெற்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பற்றி தெரியாத விவரங்களை பார்ப்போம்.

ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராக இருப்பார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஹில்லரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராக இருப்பார்.
''எவர்கிரீன்''(Evergreen) அவரது சங்கேதப் பெயர்

வெள்ளை மாளிகையில் இருந்த போது இரகசிய சேவையால் அவர் ''எவர்கிரீன்'' என்றும் அவரது கணவர் பில் கிளிண்டனை ''ஈகள்'' (Eagle) என்றும் அழைக்கப்பட்டனர்.

அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டன் அதிபராக 20 ஜனவரி, 1993ல் அமெரிக்காவின் 42வது அதிபராக வாஷிங்டன்னில் பதவி ஏற்றுக் கொண்ட பின் மக்களைப் பார்த்து கை அசைத்த காட்சி.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஹில்லரி கிளிண்டன் 1993ல் அமெரிக்காவின் முதல் பெண்மணியானார் .
அவர் கிராமி விருதை வென்றுள்ளார்

ஹில்லாரி கிளிண்டன் 1997ல் சிறப்பாக பேசிய உரை அல்லது இசை இல்லாத ஆல்பம் (best spoken word or non-musical album) என்ற பிரிவில் கிராமி விருதை வென்றார். இந்த விருது 'இட் டேக்ஸ் எ வில்லேஜ்' (It Takes a Village) என்ற புத்தகத்தின் ஒலி வடிவுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த புத்தகம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வியை மையப்படுத்திய புத்தகம். கிளிண்டன் அவரது சுயசரிதையான ‘லிவிங் ஹிஸ்டரி' உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஹில்லரி கிளிண்டன் கிராமி விருதை ''இட் டேக்ஸ் எ வில்லேஜ்' (It Takes a Village) என்ற அவரது புத்தகத்தின் ஒலி வடிவிற்காக வென்றார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நியூ யார்க்கில் உள்ள மாடிசன் ஸ்குயர் கார்டென் (Madison Square Garden) என்ற இடத்தில் ஹில்லரி ரோதம் கிளிண்டன் 26 பிப்ரரி 1997 அன்று அவர் பெற்ற கிராமி விருதை காட்டும் காட்சி.
அரசு பதவிக்கு போட்டியிட்ட முதல் பெண்மணி

2000ம் ஆண்டில் ஹில்லாரி கிளிண்டன் நியூ யார்க் மாகாணத்தில் செனடர் பதவிக்கு போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்று அரச பதவிக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் முதல், முதல் பெண்மணி. அவர் 2006ல் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹில்லரி கிளிண்டன் அமெரிக்க செனட்டிற்கு 2000ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஹில்லரி ரோதம் கிளிண்டன், 7 நவம்பர் 2000ல், அமெரிக்க செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது தனது ஆதரவாளர்களுக்கு கை அசைத்த காட்சி.
ரோதம், கிளிண்டன் அல்லது ரோதம் கிளிண்டனா?

ஹில்லாரி ரோதம், முன்னாள் அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டனை அக்டோபர் 1975ல் திருமணம் செய்து கொண்டபோது, கிளிண்டன் என்ற பெயரை அவரது பெயரோடு சேர்த்துக்கொள்ளவில்லை.

ஆனால் பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற சில வாரங்களுக்கு பிறகு, திருமதி.கிளிண்டன் ஹில்லாரி ரோதம் கிளிண்டன் என்று வழங்கப்பட்டார்.

ஆனால் கடந்த வருடம் அவரது பிரச்சாரத்தின் போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தான் ஹில்லாரி கிளிண்டன் என்று அழைக்கப்படுவதையே விரும்புவதாக கூறியுள்ளார்.

அவர் 1996ல் இருந்து கார் ஓட்டுவதில்லை

நியூ ஓர்லியன்ஸ்ல் 2014ல் நடந்த தேசிய ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்கள் சங்க மாநாட்டில் ஹில்லரி கிளிண்டன் பேசுகையில், 1996ல் இருந்து தான் கார் ஓட்டவில்லை என்றும் தனது பொது வாழ்க்கை பற்றிய வருத்தங்களில் ஒன்று தான் இனிமேல் எப்போதுமே கார் ஓட்ட முடியாது என்பது தான் என்றார்.

ஹில்லாரி கிளிண்டன் தான் இனி மேல் கார் ஓட்டமுடியாது என்பது பற்றி வருந்துவதாக கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஹில்லரி கிளிண்டன் மே 2008ல் பிரச்சாரம் முடிந்து கிளம்பும் போது மக்களைப் பார்த்து கையசைத்த காட்சி.

கடைசியாக நான் 1996ல் தான் கார் ஓட்டினேன். அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஏனென்றால் துரதிருஷ்டவசமாக ரகசிய சேவை இருந்ததால் அப்போதில் இருந்து நான் கார் ஒட்டவில்லை என்றார்.