ஜனநாயக ஆதரவு போராட்டம் தொடரும் – ஹாங்காங் மாணவ தலைவர்

அரசியல் சீர்திருத்தம் ஏற்பட தொடர்ந்து போராட போவதாக ஹாங்காங் மாணவர் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அரசியல் சீர்திருத்தம் ஏற்பட போராட்டம் தொடரும் என ஹாங்காங் மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டத்தில் போலீஸாரை தடுத்தது தொடர்பில் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சமூக ஆர்வலர்களை அரசு நசுக்க முயற்சிக்கிறது, ஆனால் அவர்கள் நீதி, சுதந்திரம், மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுவதை தொடர்ந்து நடத்துவர் என்று நீதிமன்றத்திற்கு வெளியே ஆதரவாளர்களிடம் பேசியபோது 19 வயதான ஜோசுவா வெங் கூறினார்.

2014 ஆம் ஆண்டு ஹாங்காங்கின் மீது பெய்ஜிங் செலுத்திய இறுக்கமான கட்டுப்பாட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான பிற குற்றச்சாட்டுக்களையும் வெங் சந்தித்து வருகிறார்.