ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர் தலைவன் ஹாங்காங்கில் விடுவிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டத்தின் மாணவர் தலைவனை ஹாங்காங் நீதிமன்றம் ஒன்று விடுவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஜோசுவா வெங்கும் மற்ற மூவரும் குற்றமற்றவர்கள் என்று ஹாங்காங் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறியதொரு போராட்டத்தின்போது போலீஸாரை தடுத்தது தொடர்பில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று 19 வயதான ஜோசுவா வெங்கும் மேலும் மூவரும் முறையிட்டிருந்தனர்.

அந்த போராட்டத்தில் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆவணத்தின் மறுபதிப்பு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

மற்ற மூன்று பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஹாங்காங்கின் மீது பெய்ஜிங் செலுத்திய இறுக்கமான கட்டுப்பாட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான பிற குற்றச்சாட்டுக்களையும் வெங் சந்தித்து வருகிறார்.