மலாவியில் அல்பினிஸத்தால் பாதிக்கப்பட்டோர் கடத்தி கொலை: எச்சரிக்கும் அம்னெஸ்டி

  • 7 ஜூன் 2016

மலாவியில் அல்பினிஸம் என்னும் பிறவிக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களைக் கொலை செய்யும் கொடூரக் கும்பல் குறித்து மனித உரிமைகள் குழுவான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து, அல்பினிஸத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் கடத்தப்பட்டு, சிதைக்கப்படும் அல்லது படுகொலை செய்யப்படும் குறைந்தது 65 சம்பவங்கள் நடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இதில், குழந்தைகளுக்கே குறிப்பிடத்தக்க அபாயம் இருப்பதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

அல்பினிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வங்களையும் கொண்டு வரும் என்ற மாந்திரீகர்களின் நம்பிக்கை காரணமாக அவர்கள் குறிவைத்து கடத்தப்படுகிறார்கள் என்று அம்னெஸ்டி கூறுகிறது.

கடத்தல் செய்ய முயற்சி செய்பவர்கள் சிக்கினால் அவர்களை சுட்டுக் கொல்ல மலாவி அரசு நேரடி உத்தரவு பிறப்பித்த போதிலும் இவ்வாறான தாக்குதல்கள் குறைந்தபாடில்லை என்கிறது அம்னெஸ்டி.