நேபாளத்தின் தேசிய கீதத்திற்கு இசை அமைத்த அம்பர் குருங் இன்று காலமானார்

நேபாளத்தின் தேசிய கீதத்திற்கு இசை அமைத்த 78 வயதான அம்பர் குருங் இன்று காலமானார்.

அவருக்கு நேபாளின் முக்கிய அரசியல்வாதிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

அம்பர் குருங் என்றுமே மறையாத ஒரு நட்சத்திரம் என்று பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி வர்ணித்தார்.

குருரங் மிகவும் பிரபலமான பாடகர், இசையமைப்பாளர். அவர் நேபாளத்தின் தற்போதைய தேசிய கீதம் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

அவர் நேபாளத்தின் இசை மற்றும் நாடக அகாடமியின் நிறுவன வேந்தராவார்.