ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவின் விளிம்பில் அலெப்போ நகரம்

  • 8 ஜூன் 2016

சிரிய நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்கப்போவதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிபர் அசாத் தெரிவித்திருக்கிறார்.

சிரிய அரசாங்க எதிர்ப்பாளர்கள் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் பகுதிகளை மீட்பதற்காக சிரிய இராணுவமும் ரஷ்ய வான் படைகளும் கூட்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

சிரியாவின் வடபகுதி நகரான அலெப்போவில் கடந்த ஆறுநாள் சண்டையில் 126 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறையில் சிக்கிய பொதுமக்களைக் காட்டும் காணொளிகள் பிபிசிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.

இதில் இடம்பெறும் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.