சர்வதேச மத்தியஸ்தத்தில் முறையீடு: பிலிப்பைன்சுக்கு சீனா எச்சரிக்கை

  • 8 ஜூன் 2016

தெற்கு சீனக் கடல் பகுதியில் உள்ள பிரதேசத்தில், தங்களுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே நிலவும் சர்ச்சை தொடர்பாக சர்வதேச மத்தியஸ்ததின் தீர்ப்பினை தான் ஏற்க போவதில்லை என்று பிலிப்பைன்ஸை சீனா எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Xinhua
Image caption சர்ச்சைக்குரிய தெற்கு சீனா கடல் பகுதி

தங்களுக்குள் நிலவி வந்த சர்ச்சையை, ஹேக்கில் உள்ள மத்யஸ்தத்திற்கான நிரந்தர நீதிமன்றத்தில் முறையிட்டதன் மூலம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு பரபரப்பான சரிவினை பிலிப்பைன்ஸ் உண்டாக்கிவிட்டது என்று இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் பிலிப்பைன்ஸின் இந்த செயல், அப்பகுதியில் அமைதி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை நிலைகுலைப்பதாக தெரிவித்த சீனா, பிலிப்பைன்சை இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.