அமெரிக்க அதிபர் தேர்தல்: கலிபோர்னியா மாநில முதன்மைத் தேர்தலில் ஹிலரி வெற்றி

  • 8 ஜூன் 2016

வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட, தனது கட்சியின் சார்பான நியமனத்தை பெற நடந்த ஒட்டுமொத்த போட்டியில் தான் வென்றதாக அறிவித்துக்கொண்ட சில மணி நேரங்களில், ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த முதன்மைத் தேர்தல்களில் ஹிலரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption கலிபோர்னியா மாநில முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஹிலாரி

பதிவான வாக்குகளில் 56 சதவீதம் பெற்றுள்ள ஹிலரி, தனது போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸை விட 13 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

அமெரிக்க அரசின் முன்னாள் செயலாளரான ஹிலரி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஒரு பெரிய அரசியல் கட்சியின் நியமனத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெருமையை பெற்றுள்ளார்.

தனது வெற்றி அமெரிக்கவில் உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒரு மைல் கல் என்று ஹிலரி கிளிண்டன் தெரிவித்தார்.

ஹிலரி கிளிண்டனை வாழ்த்திய அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலரியின் பரப்புரை பல மில்லியன் மக்களை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.

இது வரை தனது தோல்வியை ஒப்புக் கொள்ள பெர்னி சாண்டர்ஸ் மறுத்துவிட்டார்.