''வலுவான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்'': அமெரிக்காவில் மோதி

  • 8 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை MEA

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி உள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தலைவர் என்ற வகையில், அமெரிக்க ஜனநாயகத்தின் இல்லமாக கருதப்படும் ஒரு இடத்தில் தான் பேசுவதை பெரிய கௌரவமாக கருதுவதாக மோதி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது வரலாற்றில் உள்ள தயக்கங்களை மீறி வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

வாஷிங்டன் மற்றும் டெல்லி இடையே பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருக்கம் வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், வலுவான ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசியலில் உள்ள கடுமையான சூழலை இந்திய அரசியலோடு மோதி ஒப்பிட்டு பேசியது பலரையும் சிரிக்க வைத்தது.