பதின்ம வயது மகளைக் கொலை செய்த பாகிஸ்தான் பெண் கைது

பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில், தனது 17 வயது மகளை கொலை செய்ததாக ஒரு நடுத்தர வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Image caption பதின்ம வயது மகளை கொலை செய்த பாகிஸ்தான் பெண் கைது (கோப்பு படம்)

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை ஆய்வு செய்ததில், அப்பெண் சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் தீயிலிட்டு கொளுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியான ஜீனத் என்ற அந்த பெண் சமீபத்தில் தன் வீட்டிலிருந்து ஓடிப் போய், வீட்டாரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளார்.

இறந்த பெண்ணினின் கணவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தனது மனைவியை அவரது பெற்றோர், பிரச்சனையை சரி செய்து விடுவதாக வாக்குறுதி அளித்து, தங்கள் வீட்டுக்கு மீண்டும் அழைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில், இது போன்ற சம்பவம் மூன்றாவது முறையாக பாகிஸ்தானில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.