பப்புவா நியூ கினியில் மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: நால்வர் பலி

பப்புவா நியூ கினி நாட்டின் தலைநகர் போர்ட் மார்ஸ்பீயில், மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பப்புவா நியூ கினி பிரதமர் பீட்டர் ஓ நீல்

மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஓ நீல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை சந்திக்கவுள்ள சூழலில், நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர்.

போலீசார் மாணவர் கூட்டத்தை நோக்கி நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு மாணவர் குற்றம் சாட்டினார்.

கடந்த சில வாரங்களாக, பிரதமர் பீட்டர் ஓ நீல் பதவி விலக கோரி தங்கள் வகுப்புகளை மாணவர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை, பீட்டர் ஓ நீல் மறுத்துள்ளார்.