சிரியாவின் அலெப்போவில் தொடர் வான் வழி தாக்குதல்கள்: 10 பேர் பலி பலர் படுகாயம்

  • 8 ஜூன் 2016

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் வடபகுதி நகரமான அலெப்போவில் நடைபெற்ற தொடர்ச்சியான பல வான் வழி தாக்குதல்களில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கிற்கும் மேலான மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reruters

இந்த வான் வழி தாக்குதல்களில் ஒன்று கிழக்குப் பகுதியில் உள்ள ஷார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் அருகாமையில் நடத்தப்பட்டது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்குப் பின் எடுக்கப்பட்ட்தாக்க் கூறப்படும் வீடியோ காட்சிகள், கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் வீதிகளில் இறைந்து கிடப்பதையும், அழிக்கப்பட்ட கட்டிடங்களையும் காட்டின.

இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்று தெளிவாக தெரியாத நிலையில் அரசுப் படைகள் அந்நகரத்தின் கட்டுப்பாட்டை திரும்பப்பெற முயற்சித்து வருகின்றனர்.