தாய்-குழந்தை ஹெச்ஐவி தொற்றினை நீக்கிய முதல் ஆசிய நாடு தாய்லாந்து

தாயின் மூலம் குழந்தைக்கு பரவும் ஹெச்ஐவி தொற்றினை நீக்கிய முதல் ஆசிய நாடு தாய்லாந்து என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை SESA
Image caption ஹெச்ஐவி சோதனை

எய்ட்ஸ் நோயற்ற தலைமுறையை உருவாக்குவதை உறுதிசெய்ய, ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் உள்ள முதல் நாடாகவும் தாய்லாந்து விளங்குவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

பிறக்காத குழந்தைகளுக்கு ஹெச்ஐவி வைரஸ் பரவாமல் தடுக்க, ஹெச்ஐவி தொற்றுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வழக்கமான ஹெச்ஐவி சோதனை மற்றும் இலவச மருத்துவ சேவை வழங்குவது ஆகியவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.

ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவர்களின் மூலம் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஹெச்ஐவி வைரஸ் பரவ 45 சதவீதம் வாய்ப்புள்ளது. ஆனால், அவர்களுக்கு மருந்தளிக்கப்பட்டால், இந்த வைரஸ் பரவும் ஆபத்து 1 சதவீமாக குறையும்.