ஜெர்மனி அரசின் ஓய்வூதியத்தை பெறும் பெல்ஜிய நாஜிக்கள்: அமைச்சர் கோபம்

  • 9 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

2,500க்கும் மேற்பட்ட முன்னாள் பெல்ஜிய நாஜிக்கள் இன்னும் ஜெர்மனி அரசின் ஓய்வூதியத்தைப் பெற்று வருவது குறித்து பெல்ஜிய அமைச்சர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஓய்வூதியங்களை நிறுத்தக் கோரி நாஜிக்களின் கொடுமைகளிலிருந்து தப்பிய பெல்ஜியக் குடிமக்கள் , இந்த ஓய்வூதியங்கள் தரப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று கோரியதன் பின்னுள்ள கோபத்தை அமைச்சர் டேனியல் பெக்யூலெயின் பகிர்ந்துகொள்வதாக அவருக்காகப் பேசிய ஒரு அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள "Memorial Group" என்ற அழுத்தம் தரும் குழுவின் தலைவர், இந்த விவகாரத்தில் பெல்ஜியத்தால் எவ்வித பொருத்தமான தகவல்களையும் பெற முடியவில்லை அல்லது பெல்ஜியம் இந்த தகவல்களை பெற வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறது என்பது கவலை தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஜெர்மானிய ஓய்வூதியங்களைப் பெறுபவர்களில் எத்தனை பேர் பெல்ஜியத்தில் வசிக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.