அதிகார பலம் பெறும் சீன ஊழல் தடுப்பு அமைப்பு

சீனாவின் ஊழல் தடுப்பு முகமை, சில தலைவர்கள் கொள்கை ரீதியான ஈடுபாடு இல்லாமல், போதுமான அளவு சீன ஊடகங்களை கட்டுப்படுத்த தவறுவதாக அரசின் பிரசார துறையை விமர்சித்துள்ளது.

படத்தின் காப்புரிமை afp

பிரசார துறை அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை மக்களைக் கவரும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஒரு நீண்ட அறிக்கையின் மூலம் அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும் சீன கலை மற்றும் பல்கலைக்கழக வகுப்புகளிலும் சோசலிச சிந்தனைகள் வலியுறுத்தப்பட வேண்டும் என்று அந்த முகமை தெரிவித்துள்ளது.

சமீப வருடங்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பல்வேறு முறைகேடுகளைக் கண்டுப்பிடித்தல் மற்றும் கட்சிகளின் ஒழுக்க நெறிகளை அமல்படுத்துதல் உள்பட, பல்வேறு அதிகாரங்களைக் கொடுத்து ஊழல் தடுப்பு முகமையை சக்தி வாய்ந்த அமைப்பாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.