இராக்கில் இரு வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு: 20க்கும் மேற்பட்டோர் பலி

  • 9 ஜூன் 2016

இராக்கில் இரு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு பாக்தாத்தில் உள்ள வணிகப் பகுதியில் வெடிப் பொருட்கள் நிரப்பிய கார் ஒன்று வெடித்து சிதறியது.

அதே போல், இராக் தலைநகரின் வடக்கில் உள்ள ராணுவ சோதனை சாவடி ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டார்கள்.

ஐ.எஸ் அமைப்பு இணையத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாக்தாதில் தாக்குதல் ஒன்றை தாங்கள் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.

தற்போது, ஐ எஸ் அமைப்பின் கோட்டையாக கருதப்படும் பலூஜா நகரிலிருந்து, ஐ.எஸ் அமைப்பினரை விரட்டும் முயற்சியில் இராக் அரசு படைகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இராக் தலைநகரான பாக்தாத்தின் மேற்கே 60 கிமீ தொலைவில் பலூஜா உள்ளது.