கிருமித் தாக்குதலுக்கு உள்ளான ஆலிவ் மரங்களை வெட்டலாம்: நீதிமன்றம் தீர்ப்பு

  • 9 ஜூன் 2016

ஐரோப்பிய ஆணையம் அதன் உறுப்பு நாடுகள் "சைலெல்லா ஃபாஸ்டிடியோசா" என்னும் கொடிய கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆலிவ் மரங்களை வெட்ட உத்தரவு வழங்கலாம் என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை DHA

இந்த நோய், முதலில் இத்தாலியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. பிறகு அது ஆலிவ் மரங்கள் இருக்கும் பிற நாடுகளான பிரான்ஸ் அல்லது ஸ்பெயினில் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புக்லியா போன்ற பகுதியில் உள்ள விவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு, கிருமியின் தாக்குதல் அறிகுறி இல்லாத, பாதிக்கப்பட்ட மரங்களின் அருகாமையில் உள்ள மரங்களுக்கும் பொருந்தும்.