ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூன்றாண்டு முற்றுகை; உணவுக்குப் பரிதவிக்கும் ஹோம்ஸ் நகரவாசிகள்

  • 9 ஜூன் 2016

சிரியாவின் அலெப்போ நகரத்தின் மீது இந்த வாரம் மட்டும் 600 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் 100 தாக்குதல்கள் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்குள்ள செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிரியாவின் வடக்கிலுள்ள முக்கிய நகரமான மன்பிஜியிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர்.

அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து மற்றும் அரேபியப் போராளிகள் அந்த நகரைச்சுற்றி நெருங்கிவிட்டதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியா முழுக்க சுமார் ஆறு லட்சம் பேர் இப்படியான முற்றுகைக்குள் சிக்கியிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரச படைகளால் சூழப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் ஐஎஸ் அமைப்பால் சூழப்பட்டுள்ளனர்.

சிரிய அரச படைகளின் முற்றுகையில் சிக்கியுள்ள ஹோம்ஸ் நகரின் அல்வார் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று.

உறவுகளை வான் குண்டுகளுக்கு பலிகொடுத்த பலர் கடும் உணவுத்தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எப்படி வாழ்கிறார்கள் என்பது குறித்த பிபிசியின் பிரத்தியேக செய்திக்குறிப்பு.