ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர்களுக்கு நான் உதவவில்லை: ரஷ்ய அமைச்சர் முட்கோ

  • 9 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AFP

ரஷ்யாவின் விளையாட்டுத்துறை அமைச்சர், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியவர்களுக்கு தான் உதவியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை கோபத்துடன் மறுத்துள்ளார்.

ஜெர்மன் ஒளிபரப்பு நிறுவனமான ஏ.ஆர்.டி தயாரித்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு விட்லி முட்கோ பதிலளித்திருந்தார்.

தனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நகைப்பிற்குரியது எனவும், ரஷ்யா மீதான ஒருங்கிணைந்த தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, ரஷ்யாவை சர்வதேச தடகளப் போட்டிகளி்ல் இருந்து விலக்கி வைப்பதற்கு ஆதரவாக தீர்ப்பு அமையவேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என அவர் புகார் கூறினார்.

தற்போது, அமெரிக்காவில் வசித்து வரும் ரஷ்யாவின் ஊக்க மருந்து பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் முன்னாள் தலைவர் கிரிகோரி ரோட்சென்கோ, ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்க மருந்து உட்கொள்வதைப்போல, திட்டமிட்டு நாடகங்களை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.