சோமாலியாவில் ஆப்ரிக்க ஒன்றிய படைகள் மீது தாக்குதல்

அமிசோம் என்று அழைக்கப்படும் சோமாலியாவில் உள்ள ஆப்ரிக்க ஒன்றிய படைகள் மீது மீண்டும் கடுமையான தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக அல்-ஷபாப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு கூறுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

ஆப்ரிக்க ஒன்றிய படைகளின் அங்கமாக உள்ள எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்றுவிட்டதாகவும், மத்திய சோமாலிய நகரமான ஹால்கனில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட்டதாகவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் கூறுகின்றனர்.

ஆனால், ஆப்ரிக்க ஒன்றிய படை இதை மறுத்துள்ளது. அல் ஷபாப் கூறுவது தவறான தகவல் என்றும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை தாங்கள் அழித்துவி்ட்டதாகவும் அமிசோம் தெரிவித்துள்ளது.

இருதரப்புத் தகவல்களையும் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. பொதுமக்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.