ஜோர்டனில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட அமைப்பு கண்டுபிடிப்பு

  • 10 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AFP

ஜோர்டனின் பெட்ரா பகுதியில் உள்ள தொல்லியல் இடிபாடுகளில் புதையுண்டு இருந்த பிரம்மாண்ட கட்டட அமைப்பு ஒன்றை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செயற்கைக்கோள் புகைப்படங்கள் அந்த பிரம்மாண்ட அமைப்பை வெளிப்படுத்த முக்கிய பங்காற்றியுள்ளது.

அந்தக் கட்டடம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஒரு நினைவு சின்ன வடிவிலான படிகளால் சென்றடையப்படும் இந்தக் கட்டட அமைப்பு, இன்னொரு மேடை போன்ற பகுதியை இணைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இந்த அமைப்பு, கிரேக்க மற்றும் பாரசீக நாடுகளோடு பெட்ரா வர்த்தகம் மேற்கொண்டு வளம் கொழித்த நேரத்தில், பாரம்பரிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் மேடையாகப் பயன்பட்டதாக நம்பப்படுகிறது.