சீனா: நாய் இறைச்சி சாப்பிடும் விழாவை நிறுத்த கோரி பதினைந்து மில்லியன் கையெழுத்துடன் புகார்

  • 10 ஜூன் 2016

ஆண்டுதோறும் நடைபெறுகின்ற நாய் இறைச்சி சாப்பிடும் விழாவை நிறுத்தக்கோரி பதினைந்து மில்லியன் கையெழுத்துக்களுடன் கோரிக்கை ஒன்றை சீனாவிலுள்ள விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் வழங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

தங்களின் செல்ல நாய்களோடு சென்ற ஆர்வலர்கள் சீனாவின் தென் பகுதி நகரான யுலினில் நாய் இறைச்சி உண்பதை நிறுத்த கோரியுள்ளனர்.

நாய் இறைச்சி உண்ணும் விழா இந்த மாதத்தின் கடைசியில் அங்கு தொடங்க இருக்கிறது.

விலங்குகள் உரிமைகள் குறித்து அதிகரித்துவரும் அளவில் விழிப்புணர்வு அடைந்துவரும் சீன மக்கள், நாட்டின் பாரம்பரிய உணவு பட்டியலில் இடம்பெறும் பல உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்த அடிக்கடி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.