பலூஜாவில் ஐ.எஸ் - இராக் ராணுவம் இடையே உச்சக்கட்ட சண்டை

  • 10 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AP

பலூஜா நகரத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்ளும் குழுவினரை எதிர்த்து சண்டையிட்டு வரும் இராக் ராணுவத்தின் சிறப்பு படையை வழி நடத்தி செல்லும் தளபதி, தங்கள் படைகள் நகரின் மத்தியிலிருந்து வெறும் 3 கி.மீ தொலைவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரஞ்சு செய்தி நிறுவனத்திடம் பேசிய தளபதி அப்தெல்வஹாப் அல் சாடி, அரசு தொடுத்த பெரிய தாக்குதல் என அறியப்படும் தாக்குதலின் தொடக்கத்தில், இதுவரை 500 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முற்றுகைக்குள்ளாகியிருக்கும் பலூஜா நகரில் சுமார் 90 ஆயிரம் பொதுமக்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.