சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் தென்கொரிய கடற்படை கப்பல்கள்

வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான யாருக்கும் சொந்தம் கொண்டாட முடியாத கடல் பரப்பிலிருந்து சீன மீன்பிடி படகுகளை துரத்திவிட தென் கொரியா முதல் முறையாக கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

அந்த பகுதியில் கப்பல்கள் செல்ல தடையிருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான சீனப் படகுகள் அவ்விடத்தில் மீன்பிடித்து வருகின்றன என்று தென் கொரியா கூறுகிறது.

ஹான் நதியின் முகதுவாரத்தில் நீலநிற நண்டுகளை சீனர்கள் பிடிக்கின்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய கடற்கரைப் பரப்பு வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையே சமீபத்திய ஆண்டுகளில் பல பூசல்களை கண்டுள்ளது