பெரு அதிபர் தேர்தலில், பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி வெற்றி ?

பெருவில் நடந்த அதிபர் தேர்தலில் , உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர், பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி, வென்றுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி

கடந்த பல தசாப்தங்களில் அங்கு நடந்த தேர்தல்களிலேயே இந்தத் தேர்தல்தான் மிகவும் கடுமையான போட்டியை சந்தித்தது.

இன்னும் 0.25 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே எண்ணி நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலையில், குசுன்ஸ்கி 51.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, சிறையில் உள்ள முன்னாள் அதிபர் ஆல்பர்டோ ஃப்யூஜிமோரியின் மகளான, 49.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Image caption கெய்க்கோ ஃப்யூஜிமோரி

தனது ஆதரவாளர்களிடையே பேசிய குசுன்ஸ்கி, நாட்டில் தான் ஒற்றுமையையும், பேச்சுவார்த்தையையும் உருவாக்க விரும்புவதாகக் கூறினார்.

இன்னும் 50,000 வாக்குகளின் முடிவுகள் குறித்து இன்னும் சர்ச்சை நிலவுகிறது. ஃப்யூஜிமோரி இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.