நீதிபதியை நீக்க கோரி ஒரு மில்லியனுக்கு மேலானோர் கையெழுத்திட்டு புகார்

  • 10 ஜூன் 2016

அமெரிக்காவில் அவப்பெயர் பெற்ற ஒரு பாலியல் தாக்குதல் வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு தேவைக்கு அதிகமான சலுகை காட்டி குறைந்த தண்டனை வழங்கியதாகக் கருதப்படும் நீதிபதியை நீக்கிவிட கோரி ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Jason Doiy The Recorder via AP
Image caption ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக வழக்கின் நீதிபதி

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் சுயநினைவின்றி இருந்த பெண்ணொருவரிடம் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய புரோக் டர்னருக்கு ஆறுமாத சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகம்

இந்த வழக்கு தேசிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவரால் வெளியிடப்பட்ட உணர்ச்சிமிகு அறிக்கை ஒன்று படிக்கப்பட்டது, இந்த கோபத்திற்கு ஓரளவு காரணமாகும்.

கௌரவமிக்க பல்கலைக்கழகத்தில் வெள்ளை இன தடகள நட்சத்திரம் என்பதால் டர்னர் மிதமான தண்டனையோடு விடப்பட்டிருக்கிறார் என்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.