4 ஆண்டுகளுக்கு பிறகு, சிரியாவின் தரையா நகருக்கு உணவு உதவி

  • 10 ஜூன் 2016

2012ம் ஆண்டிலிருந்து , முற்றுகையிடப்பட்ட நிலையில் இருக்கும் சிரியாவின் தரையா நகருக்கு இன்று தான் முதன்முதலில் உணவு உதவியைப் பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

உலக உணவு திட்டத்தின் உதவி பணியாளர் ஒருவர் பேசும்போது வைட்டமின் சத்துக்கள் சேர்க்கப்பட்ட மாவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுடன், ஒரு மாதத்திற்கு 2,500 பேருக்கு தேவையான அளவு உணவு பொட்டலங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும், மருத்துவ உதவி, சோப்பு மற்றும் கல்வி கற்போருக்கான பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

நான்கு ஆண்டுகளாக தரையா நகரம் அரச படைகளின் முற்றுகையின் கீழ் இருந்தது.

ஜூன் மாத இறுதிக்குள் நாட்டின் முற்றுகையில் உள்ள 19 இடங்களுக்கு மனிதாபிமான வாகனத்தொடர்கள் செல்ல சிரியா அனுமதி வழங்கியுள்ளது என்று ஐ.நா கூறுகிறது.

அதிகம் செலவு பிடிக்கும் மற்றும் ஆபத்தான வகையில் விமானம் மூலம் பொருட்களை வழங்கும் முறையை இது தவிர்க்கும் .