சிரியா: மென்பிஜி முழுவதும் சுற்றிவளைப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரின் கட்டுப்பாட்டிலுள்ள மென்பிஜி நகரம் முழுவதையும் குர்து இன மற்றும் அரபுப் போராளிகள் சுற்றி வளைத்துள்ளதாக சிரியாவின் வடப் பகுதியிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

சிரிய ஜனநாயக படைப்பிரிவுகள் என்று அறியப்படும் இந்த கூட்டு ஆயுதக்குழுவினர் அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணியின் வான்வழி தாக்குதல் மற்றும் பிற ஆதரவுகளோடு முன்னேறி வருகின்றனர்.

மென்பிஜியிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு வெளியேற இப்போது வழியில்லை என்று இந்த கூட்டணிக்கான அதிபர் ஒபாமாவின் பிரதிநிதி பிரிட் மெக்குர்க் தெரிவித்துள்ளார்.