மீன்பிடி சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்குமாறு கேட்டுகொண்டுள்ளதாக சீனா தெரிவிப்பு

மீன்பிடி தொழில் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்குமாறு சீன மீனவர்களை வலியுறுத்தியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான யாருக்கும் சொந்தம் கொண்டாட முடியாத கடல் பரப்பிலிருந்து சீன மீன்பிடி படகுகளை துரத்திவிட தென் கொரியாவும் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐநா அமைப்பும் கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ள ஒரு நாளுக்கு பிறகு சீன அரசின் இந்த கருத்து வந்துள்ளது.

அந்த பகுதியில் கப்பல்கள் செல்ல தடையிருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான சீனப் படகுகள் அவ்விடத்தில் மீன்பிடித்து வருகின்றன என்று தென் கொரியா கூறுகிறது.

ஹான் நதியின் முகதுவாரத்தில் நீலநிற நண்டுகளை சீனர்கள் பிடிக்கின்றனர்.

தங்களுடைய மீனவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயல்பாட்டையும் எடுக்க வேண்டாம் என்றும் சீனா வலியுத்தியுள்ளது.