ப்ளோரிடாவில் அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை

  • 11 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AP

ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிரிஸ்டினா கிரிம்மி, தி வாய்ஸ் என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துவிட்டு தன்னுடைய ரசிகார்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்த போது தாக்கப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் கிரிம்மி உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுட்டவரை கிரிம்மியின் சகோதரர் தடுத்த போது, அந்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.