சீன பொருளாதாரத்திற்கு ஆபத்து: ஐ.எம்.எஃப் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty

வளர்ந்து வரும் அரசுக்கு சொந்தமான பெரு நிறுவனங்களின் கடன் பிரச்சினையை சீனா விரைவாக கவனம் செலுத்தி நிவர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சீனாவை எச்சரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை மேலாண் இயக்குநர் டேவிட் லிப்டன், சீன பொருளாதாரத்தில் இது ஒரு முக்கிய பிழையாக பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

இது, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கலாம் அல்லது வங்கிகளை நெருக்கடிக்குள் சிக்க வைக்கலாம் என்கிறார். அல்லது இந்த இரண்டுமே நடைபெறலாம் எனவும் கூறுகிறார்.

இப்பிரச்சினைக்கு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களே காரணம் என டேவிட் லிப்டன் அடையாளம் கண்டுள்ளார்.

இச்சூழலில், சீனா அரசானது, குறைந்த வருவாய் ஈட்டும் நிறுவனங்களை மூடிவிடுவதாகவோ அல்லது சீரமைப்பதாகவோ உறுதியளித்துள்ளது.

ஆனால், அந்த நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.