அமெரிக்க கல்லூரி நுழைவு தேர்வுகள் ரத்து

தேர்வு பொருட்கள் திருட்டு போனதால், அமெரிக்க கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க நடத்தப்படும் தேர்வுகள் தென் கொரியாவிலும் ஹாங்காங்கிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை PA
Image caption கோப்பு படம்

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத இருந்த நிலையில் சில மணிநேரங்களுக்கு முன்னால் அவை ரத்து செய்யப்பட்டுள்ன.

ஆக்ட் (ACT) என்று அழைக்கப்படும் அமெரிக்க நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற இந்த தேர்வுகள் அமெரிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களை மதிப்பிட உதவுகின்றன.

படத்தின் காப்புரிமை ACT

ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.