கண்ணீர் புகை குண்டுகளை வீசி கால்பந்து ஆதரவாளர்களை தடுத்த பிரான்ஸ் போலீசார்

  • 11 ஜூன் 2016

தெற்கு பிரான்ஸ் நகரமான மார்செயில் நூற்றுக்கணக்கான மேற்பட்ட இங்கிலாந்து கால்பந்து ஆதரவாளர்களை கலவர தடுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி பின்னுக்கு தள்ளினர்.

படத்தின் காப்புரிமை Reuters

தொடர்ந்து மூன்றாவது நாளாக பழைய துறைமுகத்தைச் சுற்றிலும் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளைச் சுற்றிலும் நடந்த வன்முறையின் போது காலி பீயர் பாட்டில்கள் போலீசார் மீது வீசப்பட்டன.

ரஷ்யா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடக்கவுள்ள 'யூரோப்பியன் சாம்பியன்ஷிப்' போட்டிகளின் முதல் போட்டி நடக்கவுள்ள நிலையில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நகரத்திற்குள் வந்து குவியும் நிலையில், அதிகாரிகள் மேலும் கலவரங்களை தடுக்க தயாராகி வருகின்றனர் .