லிபியாவிலும் வீழ்ந்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான கடும் போராட்டத்திற்கு பின்னர் சிர்டே நகரின் துறைமுகத்தை தற்போது தங்களுடைய கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளதாக திரிபோலியிலுள்ள லிபியா ஐக்கிய அரசின் படைப்பிரிவுகள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

இராக் மற்றும் சிரியாவுக்கு வெளியே ஐ.எஸ் தீவிரவாதிகளின் மிக முக்கிய வலுவிடமான சிர்டேவில் கடந்த மாதம் போர் தொடங்கியது.

ஐநா ஆதரவில் அமைந்துள்ள அரசின் படைப்பிரிவின் பெரும்பாலானவர்கள், லிபியாவின் மேற்குப் பகுதி நகரான மிஸ்ராட்டாவை சேர்ந்த ஆயுதக்குழுவினர் ஆவர்.

படத்தின் காப்புரிமை Reuters

ஐ.எஸ். தீவிரவாதிகளின் மூத்த தலைவர்கள் தெற்கில் பாலைவனத்திற்கு தப்யோடிவிட்டனர் என்று இந்த படைப்பிரிவின் பேச்சாளர் ஜெனரல் முகமது அல்-கௌஸ்ரி தெரிவித்துள்ளார்.

சிர்டேயின் நடுவில் பல ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.