பிரட்டன் அரசி எலிசபெத்தின் 90வது பிறந்தநாள்: தொடரும் கொண்டாட்டங்கள்

  • 11 ஜூன் 2016

பிரட்டன்அரசி எலிசபெத்தின் 90வது பிறந்தநாளை அடையாளப்படுத்தும் விதமாக இன்றும் கொண்டாட்டங்கள் தொடரும்.

படத்தின் காப்புரிமை WPA pool

ராணுவ படை பிரிவுகளின் வண்ணமையமான அணிவகுப்பை காட்டும் விதமாக 1,600க்கும் மேற்பட்ட வீரர்கள் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்து செல்வார்கள்.

வருடாந்திர அணிவகுப்பு, வார இறுதி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்; ஏப்ரல் மாதம் தான் அரசியின் பிறந்தநாள்.

அணிவகுப்பிற்கு பிறகு பழங்கால மற்றும் நவீன ராணுவ விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெறும். ஊர்வலம் ராயல் பார்ஜ் கிலோரியானா உள்பட, டஜன் கணக்கான வரலாற்று சிறப்புமிக்க படகுகளின் ஊர்வலம் தேம்ஸ் நதியில் நடைபெறும்.