நியூயார்க்கில் தரையிறங்கியது சூரிய சக்தியால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானம்

சூரிய சக்தியால் இயங்கும் விமானமான சோலார் இம்பல்ஸ் உலகை சுற்றி வருவதற்கான தனது இறுதி முயற்சியை நியூயார்கில் தரையிறங்கி முடித்துக் கொண்டது.

படத்தின் காப்புரிமை SOLAR IMPULSE

பென்சில்வேனியாவில் இருந்து கிளம்பிய விமானம், நியூயார்க் துறைமுகத்தில் உள்ள சுதந்திர தேவி சிலையை கடந்து வந்தது.

சுவிஸ்சர்லாந்தில் உருவாகப்பட்ட இந்த விமானம், ஜம்போ ஜெட்டின் இறக்கையை விட பெரிய இறக்கையை உடையது. ஆனால் அதன் எடை ஒரு காரின் எடையை ஒத்தது.

சோலார் இம்பல்ஸ் விமானம் தனது பயணத்தை கடந்த வருடம் மார்ச் மாதம் அபுதாபியில் தொடங்கியது.