வேனிலிருந்து தப்பும் காட்சி தீயாகப் பரவி, தர்ம சங்கடத்தில் தெ.ஆப்ரிக்கப் போலிஸ்

  • 11 ஜூன் 2016

தென்னாப்பிரிக்காவில், போலீஸ் வேனில் இருந்து இரண்டு ஆண்கள் தப்பியோடிய காட்சிகள், பல்வேறு சமூக வலை தளங்களிலும் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அதே நிலையில், இது போலீசாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் முதலில் ஒருவர், பின் கதவு வழியாக வெளியேறும் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

சாலையில் நின்றுகொண்டிருந்தவர்கள் பலரும் சிரிப்புகளுக்கு மத்தியில், அவர் தனது நண்பரையும் வண்டியில் இருந்து வெளியேற உதவினார். பின்னர் இருவரும் ஓடிவிட்டனர்.

அங்கு போலீசார் யாரையும் பார்க்க முடியவில்லை.

போலீஸ் தகவல் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு பற்றிய குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும், இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அந்தச் சம்பவத்தைப் பார்த்த, சாலையில் சென்றவர்களின் எதிர்வினை தன்னை பாதித்துள்ளதாகத் தெரிவித்தார்.