சிரியாவின் மென்பிஜியில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிப்பு

  • 11 ஜூன் 2016

சிரியாவின் வட பகுதி நகரான மென்பிஜியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான குடிமக்களை எண்ணிக் கவலையடைவதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல ஆயிரக்கணக்கான குடிமக்கள் மென்பிஜி நகரில் சிக்குண்டுள்ளதாக தெரிய வருகிறது

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் கடும் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இந்த கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

முக்கியமான விநியோகப் பாதையில் அமைந்துள்ள இந்நகரத்தை குர்து இன மற்றும் அரபுப் போராளிகள் சுற்றி வளைத்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அரேபிய தலைமையிலான படைப்பிரிவுகள் முன்னேறி செல்கையில் முன்னணி நிலைகளை வலுப்படுத்தி வருகின்றன

அரேபியாவின் தலைமையிலான படைப்பிரிவுகள் முன்னேறிச் செல்கையில் முன்னணி நிலைகளை வலுப்படுத்தி வருவதாக ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் அதிபர் ஒபாமாவின் பிரதிநிதி பிரெட் மெக்குர்க் தெரிவித்திருக்கிறார்.