ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் தயாரிக்கும் சாத்தியத்தை அமெரிக்க ராணுவம் ஆராய்கிறது

ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த மாதம், அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கை கட்டளையகம், உற்பத்தி பொருட்கள் குறித்து தகவல்களை அறிய ஒரு நோட்டீஸ் அனுப்பியது.

கலாஷ்நிக்கொவ் துப்பாக்கிகள், ரஷ்யாவின் ஸ்னைபர் துப்பாக்கி மற்றும் இயந்திர துப்பாக்கிகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் ஆர்வமோடு இருகிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில், மோதல் இடங்களில் இருக்கும் அமெரிக்காவல் ஆதரிக்கப்படும் பல ஆயுதக் குழுக்கள் ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றன.

சமீப ஆண்டுகளில் ரஷ்யா, மிக்ஹைல் கலாஷ்நிக்கொவ்ஸின் தனித்துவ வடிவமைப்பிற்கு காப்புரிமையை கோர முயற்சிகிறது. இந்த வடிவமைப்பை ஏற்கனவே பல நாடுகள் பயன்படுத்துகின்றன.